The one who imparts knowledge is God.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

Become a Teacher | ஆசிரியராய் எம்மோடு இணையுங்கள்

Join Our Mission: Inspiring the Next Generation of Tamil Speakers

At the Canberra Tamil School, we believe that language is the heartbeat of our culture. We are looking for passionate individuals to join our dedicated team of volunteer teachers and help us pass on the gift of the Tamil language and heritage to our children.

Why Volunteer with Us?

  • A Lasting Impact: You will play a vital role in ensuring that our rich language and traditions thrive in the hearts of the younger generation here in the ACT.

  • Community Connection: Join a vibrant network of educators and like-minded individuals who share a deep love for our heritage.

  • Personal Fulfillment: There is immense joy in watching a child find their voice in their mother tongue. Your contribution will leave a legacy of cultural pride and resilience.

Who are we looking for? You don’t need to be a professional educator to make a difference. If you have a strong command of Tamil, a patient heart, and a desire to work with children, we would love to hear from you. We provide a supportive environment and the necessary curriculum guides to help you succeed in the classroom.

By committing just two hours on Saturday afternoons, you can help bridge the gap between our glorious past and our children’s bright future.

Join us today and be a part of something truly meaningful!

நமது மொழிப்பணியில் இணைய ஓர் அழைப்பு!

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் மகாகவி பாரதி. அத்தகைய இனிமை வாய்ந்த நமது தாய்மொழியை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் உன்னதப் பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ள கான்பெரா தமிழ்ப் பாடசாலை அன்புடன் அழைக்கிறது.

நீங்கள் ஏன் எங்களுடன் இணைய வேண்டும்?

  • பண்பாட்டுப் பங்களிப்பு: புலம்பெயர் சூழலில் வளரும் நமது குழந்தைகளுக்குத் தமிழ் மொழியையும், அதன் செழுமையான பண்பாட்டையும் கற்றுத்தருவது காலத்தின் கட்டாயம். அந்த வரலாற்றுப் பணியில் நீங்கள் ஒரு முக்கிய அங்கமாகத் திகழலாம்.

  • சமூகத் தொடர்பு: கான்பெராவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் ஒரு சிறந்த வாய்ப்பு இது.

  • தன்னார்வத்தின் திருப்தி: நமது வேர்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு அறிவொளி ஊட்டுவது, மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும்.

உங்களிடம் தமிழுக்கான ஆர்வமும், குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் பொறுமையும் இருந்தால் போதும். நீங்கள் முறையான ஆசிரியப் பயிற்சி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை; எமது அனுபவமிக்க ஆசிரியக் குழு உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும்.

வாரத்தில் இரு மணிநேரங்களை நமது மொழிக்காக ஒதுக்கி, எதிர்காலத் தலைமுறையைத் தமிழ் பேசும் தலைமுறையாக உருவாக்குவோம் வாரீர்!

Become a Teacher

Spam Check: *