Enrolment | மாணவர் சேர்க்கை
Student Enrolments
Enrolment Process | மாணவர் சேர்க்கை நடைமுறை
Please complete the enrolment process to be added to our waiting list. The Canberra Tamil School will contact you when enrolments reopen in Term 4.
மாணவர் சேர்க்கைக்கான காத்திருப்புப் பட்டியலில் இணைய, தயவுசெய்து விண்ணப்ப நடைமுறைகளை முடிக்கவும். நான்காம் தவணையில் சேர்க்கை மீண்டும் ஆரம்பமாகும்போது, எமது பாடசாலை நிர்வாகம் உங்களைத் தொடர்பு கொள்ளும்.
1: Age Eligibility Check | வயதுத் தகுதி சரிபார்ப்பு
Click here to confirm that your child meets the age requirement. Children must be at least three and a half years old by 30 April to enrol. For 2026 enrolments, children born on or before 31 October 2023 meet this requirement.
உங்கள் குழந்தை சேர்க்கைக்கான வயது வரம்பைப் பூர்த்தி செய்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளவும். பாடசாலையில் சேருவதற்கு, ஏப்ரல் 30-ஆம் திகதிக்குள் குழந்தைக்குக் குறைந்தபட்சம் மூன்றரை (3.5) வயது நிறைந்திருக்க வேண்டும். 2026-ஆம் ஆண்டுச் சேர்க்கைக்கு: ஒக்டோபர் 30, 2023- அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்த குழந்தைகள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். வயதுத் தகுதியைச் சரிபார்க்க இங்கே அழுத்தவும்.
2: Submit the Online Enrolment Form | இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல்
Complete and submit the online enrolment form.
சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை இணையம் வழியாகப் பூர்த்தி செய்க. உங்கள் விபரங்களைச் சரியாகப் பதிவிடுவதை உறுதி செய்யவும்.
3: School Fees | பாடசாலைக் கட்டணம் செலுத்துதல்
School fees will be collected by the Finance Team during enrolment.
சேர்க்கை உறுதி செய்யப்படும்போது, பாடசாலையின் நிதிக் குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும்.
4: Class Placement | வகுப்பு ஒதுக்கீடு
New students will be guided to their appropriate classrooms. Students in Year 6 and above will complete a 15‑minute assessment to determine their class placement.
சேர்க்கை முடிந்ததும், புதிய மாணவர்கள் தங்களுக்குரிய வகுப்பறைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 6-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட நிலைகளில் சேரும் மாணவர்கள், அவர்களின் மொழித்திறனை அறிந்து சரியான வகுப்பில் சேர்க்கப்படுவதற்காக 15 நிமிட மதிப்பீட்டுத் தேர்வை எழுத வேண்டும்.
