Curriculum | பாடத்திட்டம்
Our Curriculum Overview | பாடத்திட்டக் கட்டமைப்பு
A Commitment to Excellence
Our school’s curriculum is thoughtfully designed to suit the age and language level of every student. It offers a holistic learning experience that goes beyond language, nurturing life values and cultural awareness.
எமது பாடசாலையின் பாடத்திட்டம் மாணவர்களின் வயது மற்றும் மொழித்திறனுக்கு ஏற்ப, முறையான படிநிலைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் மொழி கற்றல் மட்டுமல்லாது, வாழ்வியல் விழுமியங்களையும் பண்பாட்டையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான கல்வி முறையாகும்.

1. Elementary Level: Pre‑Kindergarten to Level 2
At this stage, our main goal is to spark children’s interest in the Tamil language.
Basic Knowledge: Introducing vowels, consonants, and simple words.
Learning Method: Building vocabulary through play‑based activities, songs, stories, and visual aids.
Speaking Skills: Practising simple everyday sentences to develop confidence in spoken Tamil.
1. ஆரம்ப நிலை: அரும்புகள் (முன்பள்ளி முதல் தரம் 2 வரை)
இந்த நிலையில், குழந்தைகளுக்குத் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதே எமது முதன்மை நோக்கம்.
அடிப்படை அறிவு: உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் மற்றும் எளிய சொற்களை அறிமுகப்படுத்துதல்.
கற்றல் முறை: விளையாட்டு வழி கல்வி (Play-way method), பாடல்கள், கதைகள் மற்றும் சித்திரங்கள் மூலம் சொற்களஞ்சியத்தைப் பெருக்குதல்.
பேச்சுத்திறன்: அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எளிய வாக்கியங்களைப் பேசப் பழக்குதல்.

2. Intermediate Level: Level 3 to Level 5
At this stage, students develop the ability to read Tamil confidently and write with accuracy.
Reading and Writing: Reading simple stories and learning to write short essays and letters.
Introduction to Grammar: Understanding basic Tamil grammar rules and correct word usage.
Culture: Exploring Tamil traditions, festivals, and moral literature such as Aathisudi and Kondrai Vendan.
2. இடைநிலை: மொட்டுகள் (தரம் 3 முதல் தரம் 5 வரை)
இம்மாணவர்கள் மொழியை வாசிக்கவும் பிழையின்றி எழுதவும் இங்கு கற்றுக்கொள்கிறார்கள்.
வாசிப்பு மற்றும் எழுத்து: எளிய கதைகளைப் படித்தல், சிறு கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் எழுதும் திறனை வளர்த்தல்.
இலக்கண அறிமுகம்: அடிப்படைத் தமிழ் இலக்கண விதிகளையும், சொற்களின் பயன்பாட்டையும் அறிமுகப்படுத்துதல்.
கலாச்சாரம்: தமிழ் மரபுகள், பண்டிகைகள் மற்றும் அறநெறிக் கதைகள் (ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்றவை) பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

3. Higher Level: Level 6 to Level 8
At this level, students deepen their understanding of Tamil and develop the ability to use the language independently.
Literary Practice: Studying simple poems from Thirukkural and Sangam literature with comprehension.
Creativity: Building confidence through debates, essay competitions, and public speaking activities.
Translation: Strengthening skills in translating and communicating between Tamil and English.
3. உயர்நிலை: மலர்கள் (தரம் 6 முதல் தரம் 8 வரை)
இந்த நிலையில், மாணவர்கள் மொழியை ஆழமாகப் புரிந்துகொண்டு சுயமாகச் செயல்படும் திறன் பெறுகிறார்கள்.
இலக்கியப் பயிற்சி: திருக்குறள் மற்றும் சங்க கால இலக்கியங்களின் எளிய பாடல்களைப் பொருள் உணர்ந்து கற்றல்.
படைப்பாற்றல்: விவாதம் (Debates), கட்டுரைப் போட்டிகள் மற்றும் மேடைப் பேச்சுகள் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தல்.
மொழிபெயர்ப்பு: ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு இடையே கருத்துப் பரிமாற்றம் செய்யும் திறனை மேம்படுத்துதல்.

4. Senior Students: Year 11 & 12 Pathways
Specialised training is offered to secondary students in alignment with the Australian Education System (ACT BSSS).
ATAR Accreditation: Supporting and preparing students in Years 11 and 12 to study Tamil as an accredited ATAR subject.
Exam Preparation: Providing intensive language training and mock examinations to help students achieve strong results in university entrance assessments.
4. மூத்த மாணவர்கள்: இலக்கு (ஆண்டு 11 & 12 க்கான வழிகாட்டல்)
மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆஸ்திரேலியத் தலைநகர மண்டலக் கல்வி முறையோடு (ACT BSSS) இணைத்து சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ATAR அங்கீகாரம்: 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்துப் பயில வழிவகை செய்து அவர்களைத் தயார்ப்படுத்தல்.
தேர்வுக்குத் தயார்படுத்தல்: பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறத் தேவையான ஆழமான மொழிப்பயிற்சி மற்றும் மாதிரித் தேர்வுகளை நடத்துதல்.

Teaching Highlights | கற்பித்தல் சிறப்பம்சங்கள்
Our teaching approach combines experienced educators, modern tools, and continuous support to ensure strong learning outcomes.
Volunteer Teachers: Students receive direct guidance from qualified and experienced volunteer educators.
Modern Technology: Classrooms are equipped with audio‑visual systems and contemporary learning tools to enhance engagement.
Continuous Assessment: Regular assessments and constructive feedback help track progress and support improvement.
Teaching Guidance: Comprehensive and effective teaching methods, along with ongoing training workshops, are integrated into our curriculum to support teacher development.
தன்னார்வ ஆசிரியர்கள்: தகுதிவாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் நேரடி வழிகாட்டுதல்.
நவீன தொழில்நுட்பம்: வகுப்பறைகளில் ஒலி-ஒளி அமைப்புகள் மற்றும் நவீனக் கற்றல் கருவிகளின் பயன்பாடு.
தொடர் மதிப்பீடு: மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க அவ்வப்போது நடத்தப்படும் தேர்வுகள் மற்றும் பின்னூட்டங்கள்.
கற்பித்தல் வழிகாட்டுதல்: எங்கள் பாடத்திட்டத்துடன் ஒருங்கிணைந்த விரிவான, பயனுள்ள ஆசிரியர் கற்பித்தல் வழிகாட்டுதல் முறைகள் மற்றும் பயிற்சி பட்டறைகள்.
