Parents & Students Handbook

Contents / பொருளடக்கம்
1. Introduction
அறிமுகம்
2. Tamil Anthem
தமிழ்த் தாய் வாழ்த்து
3. Why Learn Tamil?
தமிழ் மொழியை ஏன் கற்க வேண்டும்?
4. Encouraging Your Child at Home
வீட்டில் பெற்றோரின் பங்களிப்பு
5. School History
பாடசாலை வரலாறு
6. Enrolment & Eligibility
மாணவர் சேர்க்கை மற்றும் தகுதி வரம்புகள்
7. Course & Class Structure
பாடநெறி மற்றும் வகுப்பு அமைப்பு
8. Code of Conduct, Values & Parent Responsibilities
நன்னடத்தை விதிகள், மதிப்புகள் மற்றும் பெற்றோரின் கடமைகள்
9. Duty of Care, Safety & Contact
மாணவர் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் தொடர்பு விபரங்கள்

Introduction

Canberra Tamil School (CTS) is dedicated to the pursuit of excellence in learning, teaching, and community engagement. Our mission is to promote and nurture Tamil language, culture, and heritage within the ACT community while providing a safe, structured, and supportive environment where students can flourish.

அறிமுகம்

கான்பெரா தமிழ்ப் பாடசாலை, கற்றல், கற்பித்தல் மற்றும் சமூகப் பங்கேற்பில் சிறந்து விளங்குவதையே தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியத் தலைநகர மண்டலத்தில் (ACT) வாழும் இளைய தலைமுறையினரிடம் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பான, முறையான மற்றும் ஆதரவான முறையில் வளர்த்தெடுப்பதே எமது நோக்கமாகும்.

Tamil Anthem

The Tamil Thai Vaazhtu (Invocation to Mother Tamil) is traditionally recited in Tamil. The original text from the handbook is preserved below:

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்க தமிழ்மொழி ஓங்க
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று;
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

வளர்மொழி வாழிய வே!
வளர்மொழி வாழிய வே!

— மகாகவி சுப்ரமணிய பாரதியார்

தமிழ்த் தாய் வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்க தமிழ்மொழி ஓங்க
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று;
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

வளர்மொழி வாழிய வே!
வளர்மொழி வாழிய வே!

— மகாகவி சுப்ரமணிய பாரதியார்

Why Learn Tamil?

  • Benefits of Bilingualism: Retaining your native language enhances cognitive flexibility, problem-solving, and language-learning skills.
  • Academic Confidence: Learning Tamil gives children greater confidence in the classroom, helping them process and grasp linguistic concepts faster.
  • Cultural Connection & Heritage: Studying Tamil fosters pride in cultural identity, heritage, and rich literary traditions.
  • Global Perspective: Early language learning deepens understanding and appreciation for different cultures worldwide.
  • Literacy & Future Opportunities: Mastery of a second language strengthens overall literacy, boosts performance in mainstream school, and opens future career pathways in diplomacy, education, commerce, tourism, and international relations.

தமிழ் மொழியை ஏன் கற்க வேண்டும்?

  • இருமொழி அறிவின் நன்மைகள்: தாய்மொழியைத் தொடர்ந்து பயில்வது குழந்தைகளின் சிந்தனைத் திறன், சிக்கல்களைத் தீர்க்கும் ஆற்றல் மற்றும் புதிய மொழிகளைக் கற்கும் திறனை மேம்படுத்துகிறது.
  • கல்வித் தன்னம்பிக்கை: தமிழ் மொழியைக் கற்பது வகுப்பறையில் குழந்தைகளுக்குக் கூடுதல் தன்னம்பிக்கையைத் தருகிறது. இது மொழியியல் கருத்துக்களை விரைவாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.
  • பண்பாட்டுப் பிணைப்பு: தமிழ் கற்பதன் மூலம் குழந்தைகள் தங்கள் தொன்மையான பண்பாடு, இலக்கியங்கள் மற்றும் அடையாளத்தின் மீது பெருமிதம் கொள்கிறார்கள்.
  • உலகளாவிய பார்வை: சிறுவயதிலேயே இரு மொழிகளைக் கற்பது, உலகின் பிற பண்பாடுகள் மற்றும் மனிதர்களைப் பற்றியப் பரந்த புரிதலையும் மதிப்பையும் உருவாக்குகிறது.
  • எதிர்கால வாய்ப்புகள்: தாய்மொழியில் தேர்ச்சி பெறுவது ஒட்டுமொத்த எழுத்தறிவை வலுப்படுத்துவதுடன், முதன்மைப் பாடசாலைக் கல்வியிலும் சிறந்து விளங்க உதவுகிறது. மேலும் தூதரகம், கல்வி, வணிகம், தகவல் தொலைத்தொடர்பு மற்றும் ஊடகவியல் சார்ந்த துறைகளில் எதிர்கால வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது.

Encouraging Your Child at Home

  • Converse in Tamil: Speak Tamil at home regularly. Encourage extended family and friends to interact with your child in Tamil. An effective approach is for one parent to converse in English and the other in Tamil.
  • Homework Support: Dedicate at least one hour per week to assist your child with Tamil homework and interactive activities.
  • Lesson Reviews: Discuss weekly lessons and classroom activities with your child after Tamil school to reinforce their learning.
  • Cultural Storytelling: Share traditional stories, translate simple English texts into Tamil (and vice versa) as a fun family activity, and actively participate in cultural celebrations such as Inba Thamizh Vizha.
  • Regular Attendance: Consistent school attendance ensures continuous progress and eligibility for academic recognition and awards.

வீட்டில் பெற்றோரின் பங்களிப்பு

  • தமிழில் உரையாடுங்கள்: வீட்டில் குழந்தைகளுடன் தொடர்ச்சியாகத் தமிழில் பேசுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் தமிழில் பேச ஊக்குவியுங்கள். ஒரு பெற்றோர் ஆங்கிலத்திலும், மற்றொரு பெற்றோர் தமிழிலும் பேசுவது பயனுள்ள அணுகுமுறையாகும்.
  • வீட்டுப் பயிற்சிகளுக்கு உதவுங்கள்: வாரத்திற்குச் குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் ஒதுக்கி, பிள்ளைகளின் தமிழ் பாடசாலை வீட்டுப் பயிற்சிகளுக்கு வழிகாட்டுங்கள்.
  • பாடங்களை மீளாய்வு செய்யுங்கள்: தமிழ்ப் பாடசாலை முடிந்ததும் அன்று கற்றுக் கொண்ட விடயங்களைப் பற்றிப் பிள்ளைகளிடம் கலந்துரையாடுங்கள்.
  • பண்பாட்டுக் கதைகளைக் கூறுங்கள்: தமிழ்ப் பண்பாட்டுக் கதைகளைக் கூறுதல், ஆங்கிலக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறுதல் போன்ற சுவாரசியமான பயிற்சிகளைச் செய்யுங்கள். 'இன்பத் தமிழ் விழா' போன்ற நிகழ்வுகளில் பிள்ளைகளை ஆர்வத்துடன் பங்கேற்கச் செய்யுங்கள்.
  • தொடர்ச்சியான வருகை: பிள்ளைகள் தமிழ்ப் பாடசாலைக்குத் தவறாது வருகை தருவதை உறுதி செய்யுங்கள். இது அவர்களின் தொடர்ச்சியான அறிவு வளர்ச்சிக்கும், விருதுகளைப் பெறுவதற்கும் அவசியமானது.

School History

The history of Canberra Tamil School is a testament to community dedication, resilience, and a deep love for the Tamil language:

  • The Humble Seed: In the autumn of 1991, through the noble efforts of the Canberra Tamil Association (CTA), Canberra Tamil School began with just 14 students and 5 visionary teachers operating within the walls of what is now the Kambah Medical Centre. In its earliest days, Mr. Kanagasabhai managed administration.
  • Growth & Community Spirit: As student numbers outgrew Kambah, the school relocated to Erindale College. While children learned in classrooms, parents gathered at the nearby Erindale Active Leisure Centre for social badminton, creating a strong community network.
  • Formalisation: In 1996, the Canberra Tamil Association extended its constitution recognising the Tamil school to operate independently, and formed a separate school administrative committee.
  • Northern Expansion: To accommodate growing demand across the city, a northern stream was launched at the Dickson Library. It later moved through Nicholls Primary School and Palmerston Primary School.
  • Modern Era – Two Campuses: Today, Canberra Tamil School serves over 150 students supported by more than 30 volunteer teachers across two main campuses:
    • South Campus: Hosted at Melrose High School.
    • North Campus: Hosted at Harrison Public School.

பாடசாலை வரலாறு

கான்பெரா தமிழ்ப் பாடசாலையின் வரலாறு என்பது ஒரு சமூகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தாய்மொழியின் மீதான ஆழந்த காதலின் வெளிப்பாடாகும்:

  • தொடக்கப் புள்ளி: 1991ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், வெறும் 14 மாணவர்கள் மற்றும் 5 தன்னார்வ ஆசிரியர்களுடன் கம்பா மருத்துவ மையத்தில் (Kambah Medical Centre) கான்பெரா தமிழ்ச் சங்கத்தினால் இப்பாடசாலை தொடங்கப்பட்டது. திரு. கனகசபை அவர்கள் இதன் தொடக்கக்கால நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று வழிநடத்தினார்.
  • வளர்ச்சியும் சமூகப் பிணைப்பும்: மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால் பாடசாலை எரிண்டேல் கல்லூரிக்கு (Erindale College) மாற்றப்பட்டது. பிள்ளைகள் வகுப்பறையில் கல்வி கற்றபோது, பெற்றோர்கள் எரிண்டேல் விளையாட்டு மையத்தில் கூடி பூப்பந்தாட்டம் (Badminton) விளையாடி மகிழ்ந்தனர்.
  • அதிகாரப்பூர்வ அங்கீகாரம்: 1996ஆம் ஆண்டில் கான்பெரா தமிழ்ச் சங்கம் (CTA) தனது யாப்பை நீட்டுவித்து தமிழ்ப் பாடசாலை தனித்துவமாக இங்குவதை அங்கீகரித்து, தனியான பாடசாலை நிருவாகக் குழுவை உருவாக்கியது.
  • வடக்குப் பகுதி விரிவாக்கம்: கான்பெராவின் வடக்குப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, டிக்சன் நூலகத்தில் (Dickson Library) வடக்கிற்கான கிளை தொடங்கப்பட்டது. பின்னர் இது நிக்கோல்ஸ் மற்றும் பாமர்ஸ்டன் ஆரம்பப் பாடசாலைகளுக்கு மாற்றப்பட்டு இயங்கியது.
  • தற்காலம் – இரு வளாகங்கள்: இன்று இப்பாடசாலை 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தன்னார்வ ஆசிரியர்களுடன் இரு வளாகங்களில் இயங்கி வருகிறது:
    • தெற்கு வளாகம்: மெல்ரோஸ் உயர்நிலைப் பாடசாலை (Melrose High School).
    • வடக்கு வளாகம்: ஹாரிசன் பொதுப் பாடசாலை (Harrison Public School).

Enrolment & Eligibility

Age Eligibility Policy & Rationale

Children must be at least 3 years and 6 months old by 30 April of the enrolment year to be eligible to enrol.

Why 3.5 Years?

Children younger than 3.5 years often require a level of individual care (such as toilet independence, handling routine transitions, and following group directions without 1-on-1 assistance) that a group language classroom cannot safely provide. Because our volunteer teachers must focus on delivering lessons to the whole class, this age limit ensures a safe, positive, and manageable environment for all students.

4-Step Enrolment Process

  1. Eligibility Check: Confirm that your child turns 3.5 years old on or before 30 April of the enrolment year.
  2. Submit Online Application: Complete and submit the online enrolment form via the CTS portal/website to be placed on the waiting list. (Enrolments open in Term 4).
  3. School Fees Payment: School fees are collected by the CTS Finance Team upon enrolment confirmation.
  4. Class Placement & Assessment: New students are assigned to appropriate levels. Students enrolling in Year 6 and above complete a 15-minute placement assessment to evaluate language proficiency.

மாணவர் சேர்க்கை மற்றும் தகுதி வரம்புகள்

வயதுத் தகுதி மற்றும் காரணம்

எமது தமிழ்ப் பாடசாலையில் சேருவதற்கு, சேர்க்கை ஆண்டின் ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் குழந்தைக்குக் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 6 மாதங்கள் (மூன்றரை வயது) நிறைந்திருக்க வேண்டும்.

ஏன் இந்த வயது வரம்பு?

மூன்றரை (3 ஆண்டுகள் 6 மாதங்கள்) வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தனிப்பட்ட கவனிப்பும், கழிப்பறையைத் தாமாகப் பயன்படுத்துதல் போன்ற அடிப்படைத் திறன்களும் தேவைப்படுகின்றன. எமது தன்னார்வ ஆசிரியர்கள் ஒட்டுமொத்த வகுப்பறைக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அனைத்துக் குழந்தைகளின் பாதுகாப்பான மற்றும் திறமையான கற்றல் சூழலை உறுதி செய்ய இந்த குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நான்கு படிநிலைகள் கொண்ட சேர்க்கை நடைமுறை

  1. வயதுத் தகுதியைச் சரிபார்த்தல்: ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் குழந்தைக்கு மூன்றரை வயது பூர்த்தியாகிறதா என்பதை உறுதி செய்தல்.
  2. இணையவழி விண்ணப்பம்: பாடசாலையின் இணையத்தளம் வழியாக விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து காத்திருப்புப் பட்டியலில் இணைதல் (நான்காம் தவணையில் சேர்க்கை திறக்கப்படும்).
  3. கல்விக் கட்டணம் செலுத்துதல்: சேர்க்கை உறுதி செய்யப்படும்போது நிதிக் குழுவிடம் உரிய கட்டணத்தைச் செலுத்துதல்.
  4. வகுப்பு ஒதுக்கீடு மற்றும் மதிப்பீடு: புதிய மாணவர்கள் தங்களுக்குரிய வகுப்புகளுக்கு வழிகாட்டப்படுவர். 6ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட நிலைகளில் சேரும் மாணவர்களுக்கு 15 நிமிட மொழித்திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும்.

Course & Class Structure

Student placement is determined by Regular School Year level, age (as of 30 April), and prior Tamil experience.

Main Academic Progression Pathway

Level / Class Regular School Level Age Requirement (by 30 April) Description & Focus
Pre-Kinder Pre-School 3 years 6 months Play-based learning, nursery rhymes, songs, and basic vocabulary.
Kinder Kindergarten 4 years 6 months Builds foundational listening skills and introduces simple Tamil alphabets (Uyir letters).
Level 1 Years 1 & 2 6 years 6 months Basic reading, writing, and vocabulary building. (Year 2 students new to Tamil start in Lower Bridging).
Level 2 Years 3 & 4 8 years 6 months Sentence structure, expanded reading, and simple writing. (New Year 3-4 students without prior Tamil start in Lower Bridging).
Level 3 Year 5 9 years 6 months Reading comprehension, grammar basics, and conversational fluency. (New Year 5 students without prior Tamil start in Lower Bridging).
Level 4 Year 6 10 years 6 months Structured grammar, essay writing, and literary comprehension. (New Year 6 students without prior Tamil start in Upper Bridging).
Level 5 Year 7 11 years 6 months Intermediate literary analysis, communication, and formal writing.
Level 6 Year 8 12 years 6 months Advanced text studies, creative writing, and cultural history.
Level 7 Year 9 13 years 6 months High-level Tamil linguistics, public speaking, and essay composition.
Level 8 Year 10 14 years 6 months Advanced literary studies and graduation preparation. Completing Level 8 earns the CTS Graduation Certificate.

Alternative & Specialized Streams

  • Lower Bridging Class: Designed for new students in Years 2 to 5 (aged 7.5 to 12) with no prior Tamil studies. Focuses on foundational listening, speaking, reading, and writing. Upon passing an assessment, students transition into Level 1, 2, or 3.
  • Upper Bridging Class: Designed for new students in Years 6 to 8 (aged 10.5 to 15) with no prior Tamil studies. Prepares students for entry into Levels 4, 5, or 6 following an assessment.
  • Senior Secondary / Senior College Pathway (Canberra Tamil College – Proposed):
    • Years 11 & 12 Tamil: For senior secondary students with prior Tamil studies. Completing all 4 units contributes toward the ACT Senior Secondary Certificate (BSSS) and ATAR.
  • Adult Tamil Classes (Proposed): Tailored for students aged 15+ in Years 9–12 who are new to Tamil, or adult community members seeking to learn Tamil in a structured environment.

பாடநெறி மற்றும் வகுப்பு அமைப்பு

மாணவர்களின் வகுப்பு ஒதுக்கீடு அவர்களின் முதன்மைப் பாடசாலை வகுப்பு, வயது (ஏப்ரல் 30 நிலவரப்படி) மற்றும் முந்தையத் தமிழ் மொழி அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

முதன்மைப் பாடநெறிப் பாதை

பாடசாலை நிலை முதன்மைப் பாடசாலை வகுப்பு வயது வரம்பு (ஏப்ரல் 30 நிலவரப்படி) கற்றல் திறன் மற்றும் விவரம்
முன்பள்ளி முன்பள்ளி 3 ஆண்டுகள் 6 மாதங்கள் பாடல்கள், விளையாட்டுகள் மற்றும் எளிய சொற்கள் மூலம் தமிழ் அறிமுகம்.
ஆரம்பப் பள்ளி பாலர்பள்ளி 4 ஆண்டுகள் 6 மாதங்கள் உயிர் எழுத்துக்கள் அறிமுகம் மற்றும் கேட்டல் திறனை வளர்த்தல்.
தரம் 1 ஆண்டு 1 & 2 6 ஆண்டுகள் 6 மாதங்கள் அடிப்படை வாசிப்பு, எழுதுதல் மற்றும் சொற்கள் அறிமுகம். (தமிழ் அறியாத ஆண்டு 2 மாணவர்கள் கீழ்நிலைப் பாலப் வகுப்பில் சேர்வர்).
தரம் 2 ஆண்டு 3 & 4 8 ஆண்டுகள் 6 மாதங்கள் எளிய வாக்கிய அமைப்பு, விரிவான வாசிப்பு மற்றும் எழுதுதல். (தமிழ் அறியாத புதிய மாணவர்கள் கீழ்நிலைப் பாலப் வகுப்பில் சேர்வர்).
தரம் 3 ஆண்டு 5 9 ஆண்டுகள் 6 மாதங்கள் பந்தி புரிதல், அடிப்படை இலக்கணம் மற்றும் உரையாடல் பயிற்சி.
தரம் 4 ஆண்டு 6 10 ஆண்டுகள் 6 மாதங்கள் முறையான இலக்கணம், கட்டுரை எழுதுதல் மற்றும் இலக்கியப் புரிதல். (தமிழ் அறியாத புதிய மாணவர்கள் மேல்நிலைப் பாலப் வகுப்பில் சேர்வர்).
தரம் 5 ஆண்டு 7 11 ஆண்டுகள் 6 மாதங்கள் இடைநிலை இலக்கியப் பயிற்சி, முறையான பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி.
தரம் 6 ஆண்டு 8 12 ஆண்டுகள் 6 மாதங்கள் மேம்பட்ட உரைப்பயிற்சி, படைப்பாக்க எழுத்து மற்றும் பண்பாட்டு வரலாறு.
தரம் 7 ஆண்டு 9 13 ஆண்டுகள் 6 மாதங்கள் உயர்நிலை மொழிப் பயன்பாடு, மேடைப் பேச்சு மற்றும் விரிவான கட்டுரைப் பயிற்சி.
தரம் 8 ஆண்டு 10 14 ஆண்டுகள் 6 மாதங்கள் மேம்பட்ட இலக்கியக் கல்வி மற்றும் பட்டமளிப்புப் பயிற்சி. நிலையை நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

மாற்று மற்றும் சிறப்பு வகுப்புகள்

  • கீழ்நிலைப் பால வகுப்பு (Lower Bridging Class): ஆண்டு 2 முதல் 5 வரை பயிலும் (வயது 7.5 – 12) தமிழ் மொழிப் பின்னணி இல்லாத புதிய மாணவர்களுக்கானது. அடிப்படையைக் கற்ற பின் மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தரம் 1, 2 அல்லது 3க்கு மாற்றப்படுவர்.
  • மேல்நிலைப் பால வகுப்பு (Upper Bridging Class): ஆண்டு 6 முதல் 8 வரை பயிலும் (வயது 10.5 – 15) தமிழ் மொழிப் பின்னணி இல்லாத புதிய மாணவர்களுக்கானது. அடிப்படையைக் கற்ற பின் மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தரம் 4, 5 அல்லது 6க்கு மாற்றப்படுவர்.
  • உயர்நிலைக் கல்லூரிப் பாதை (முன்மொழியப்பட்ட திட்டம்):
    • தரம் 11 & 12 தமிழ்: உயர்நிலை மாணவர்களுக்கான பாடநெறி. இதனை நிறைவு செய்வது ACT மாநிலக் கல்விச் சான்றிதழ் (BSSS) மற்றும் பல்கலைக்கழகச் சேர்க்கைத் தகுதிக்கு (ATAR) பங்களிக்கும்.
  • வளர்ந்தோருக்கான தமிழ் வகுப்பு (Adult Tamil Classes – முன்மொழியப்பட்ட திட்டம்): 15 வயதிற்கு மேற்பட்ட தமிழ் பயில் விரும்பும் புதிய மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற சிறப்பு வகுப்பு.

Code of Conduct & Core Values

Canberra Tamil School is committed to upholding values of integrity, safety, mutual respect, and community service.

Expected Standards of Behaviour

  • Integrity & Honesty: Act truthfully, respectfully, and in good faith at all times.
  • Respect for Others: Treat teachers, volunteers, peers, and visitors with courtesy and respect. Bullying, harassment, or verbal abuse is strictly prohibited.
  • Active Engagement: Participate fully in lessons without distracting or interrupting fellow students.
  • Care of Resources: Treat host school premises (Melrose High School & Harrison Public School), furniture, and equipment with care. Clean blackboards/whiteboards, clear away rubbish, turn off lights, and return desks and chairs to their original positions.
  • Respect for Mainstream Belongings: Do not touch or disturb any materials belonging to the host mainstream schools.

Student Rules & Guidelines

  1. Punctuality & Arrival: Arrive at school promptly before classes start.
  2. Classroom Discipline: Wait for the teacher before entering classrooms. Remain seated and attentive during lessons.
  3. Electronic Devices: Mobile phones and electronic devices must remain turned off or put away inside classrooms during instruction.
  4. Food & Drinks: Eat and drink only during designated break times in approved outdoor/recess areas.
  5. Classroom Cleanliness: Ensure all personal rubbish is disposed of in bins after break times.
  6. Cultural Etiquette:
    • Greet teachers and elders with Vanakkam.
    • Stand respectfully and participate in the singing of the Tamil anthem (Tamil Thai Vaazhtu).
    • Use both hands when receiving awards or gifts.
    • Speak Tamil as much as possible while at Tamil school.
  7. Prohibited Items: Do not bring knives, sharp blades, hard cricket balls, marbles, chewing gum, or any hazardous items to school grounds.

Parent Responsibilities & Community Involvement

  1. Regular School Attendance: Ensure your child attends Tamil school consistently to support continuous learning.
  2. Safe Drop-off & Pick-up:
    • Escort young children safely into school grounds.
    • Parents of Early Childhood and Primary students must collect their children directly from teachers once school finishes.
    • Do not leave children unattended on school grounds outside official operating hours.
  3. Late Arrivals & Absences:
    • Students arriving more than 15 minutes late must have their parents obtain approval from the Campus Vice Principal before entering the classroom.
    • Inform the school in advance if a student will be absent or needs to leave early.
  4. Traffic & Parking Safety: Observe all road safety rules, speed limits, and parking regulations in school carparks, especially during busy drop-off and pick-up periods.
  5. Keeping Details Updated: Promptly update changes to your residential address, phone numbers, or emergency contact details via the CTS Online Portal.
  6. Volunteering & Participation: Parents are strongly encouraged to volunteer for sub-committees, event management, parent roster helper duties, or teaching support. Your active participation inspires our students and strengthens our community.

நன்னடத்தை விதிகள் மற்றும் முதன்மை மதிப்புகள்

கான்பெரா தமிழ்ப் பாடசாலை அனைத்து உறுப்பினர்களிடையேயும் நேர்மை, பாதுகாப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்ற எதிர்பார்ப்புகளோடு செயல்படுகிறது.

முதன்மை நெறிமுறைகள்

  • நேர்மை: எப்போதும் நேர்மையாகவும் நல்லெண்ணத்துடனும் நடந்துகொள்ளுதல்.
  • மரியாதை: ஆசிரியர்கள், பெரியோர்கள், சக மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களை மரியாதையுடனும் சகிப்புத்தன்மையுடனும் நடத்துதல். வன்முறை மற்றும் துன்புறுத்தல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • கற்றலில் ஈடுபாடு: மற்ற மாணவர்களுக்கு இடையூறு செய்யாமல் அமைதியாக வகுப்பில் பங்கேற்றல்.
  • உடைமைகளைப் பேணுதல்: பாடசாலைப் பொருட்கள், நாற்காலிகள், மேசைகளைச் சேதப்படுத்தாமல் பேணுதல். வகுப்பறைக் கரும்பலகைகளைச் சுத்தம் செய்து, குப்பைகளை அகற்றி, விளக்குகளை அணைத்து வகுப்பறையைத் தூய்மையாக வைத்திருத்தல்.
  • முதன்மைப் பாடசாலைப் பொருட்கள்: நாம் இயங்கும் முதன்மைப் பாடசாலைகளின் (Melrose High School / Harrison Public School) பொருட்களையோ, மாணவர்களின் உடைமைகளையோ தொடவோ பயன்படுத்தவோ கூடாது.

மாணவர்களுக்கான கடமைகள் மற்றும் விதிகள்

  1. நேரமின்மை மற்றும் வருகை: பாடசாலை தொடங்குவதற்கு முன்பாகவே தவறாது வருகை தர வேண்டும்.
  2. வகுப்பறை ஒழுங்கு: ஆசிரியர் வகுப்பிற்குள் சென்ற பின்னரே மாணவர்கள் உள்ளே செல்ல வேண்டும். அனுமதியின்றி இருக்கைகளை மாற்றக் கூடாது.
  3. மின்னாடனம்: கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மின்னணு சாதனங்களை வகுப்பறைக்குள் பயன்படுத்தக் கூடாது.
  4. உணவு மற்றும் பானங்கள்: இடைவேளை நேரங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே உணவு அருந்த வேண்டும்.
  5. வரிசை ஒழுங்கு: இடைவேளையின் போது வரிசையில் நின்று சிற்றுண்டிகளைப் பெற வேண்டும். நெகிழிக் குவளைகள் மற்றும் குப்பைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.
  6. பண்பாட்டு நன்நெறிகள்:
    • 'வணக்கம்' கூறுதல்.
    • தமிழ் மொழி வாழ்த்துப் பாடுதல்.
    • பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல்.
    • பரிசுகளைப் பெறும்போது இரண்டு கரங்களையும் பயன்படுத்துதல்.
    • பாடசாலையில் முடிந்தவரை தமிழில் பேசுதல்.
  7. தடைசெய்யப்பட்ட பொருட்கள்: கத்திகள், கூர்மையான பொருட்கள், கடினமான பந்துகள், கோலிகுண்டுகள், சவ்வு மிட்டாய் (Chewing gum) போன்ற ஆபத்து விளைவிக்கும் பொருட்களைக் கொண்டு வரக் கூடாது.

பெற்றோர்களின் கடமைகள்

  1. தவறாத வருகை: பிள்ளைகளைத் தவறாது பாடசாலைக்கு அனுப்பி வையுங்கள்.
  2. பாதுகாப்பான அழைப்பும் கூட்டிக்கொண்டு செல்லலும்:
    • பிள்ளைகளைப் பாடசாலை வளாகத்திற்குள் பாதுகாப்பாக அழைத்து வந்து விடுங்கள்.
    • முன்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்களை ஆசிரியர்களிடமிருந்து பெற்றோர் அல்லது பாதுகாவலர் பொறுப்பேற்றுச் செல்ல வேண்டும்.
  3. தாமதம் மற்றும் அனுமதி:
    • 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வந்தால், நிர்வாகத்தினரின் அனுமதியைப் பெற்ற பின்னரே வகுப்பறைக்குச் செல்ல வேண்டும்.
    • பாடசாலை வேளையில் அனுமதியின்றி மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது.
  4. வாகனப் போக்குவரத்து பாதுகாப்பு: பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். வீதி விதிமுறைகளுக்கேற்ப வாகனங்களை நிறுத்தி, மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாதவாறு கவனமாகச் செயல்படுங்கள்.
  5. தகவல் புதுப்பித்தல்: தொலைபேசி எண்கள், முகவரி அல்லது அவசரக்காலத் தொடர்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டால், அவற்றை உடனடியாக எமது பாடசாலைச் செயலி (Portal) தளத்தில் பதிவு செய்யுங்கள்.
  6. தொண்டர் சேவை: செயற்குழு, உபகுழுக்கள் மற்றும் பெற்றோர் தொண்டர் குழுக்களில் இணைந்து செயலாற்றுங்கள். உங்கள் பங்களிப்பு பிள்ளைகளுக்கு ஊக்கமளிக்கும்.

Duty of Care & Safety Policies

Hours of Supervision

  • Official school hours are generally 2:45 PM to 5:15 PM (during school terms).
  • CTS provides supervision from 5 minutes prior to school start until 5 minutes after school finishes (e.g., 2:55 PM to 5:05 PM). Parents are responsible for children outside these hours.
  • Parent helper volunteers are rostered to assist with supervision during arrival, recess breaks, and dismissal.

Class Sizes

To ensure proper supervision and quality teaching, CTS aims to maintain a maximum ratio of 10 students per teacher per classroom.

Campus Safety & Boundaries

  • Students are not permitted to leave school premises during school hours without written permission from the Vice-Principal.
  • Out-of-bounds areas, including roads, carparks, and unsupervised buildings, are strictly prohibited.
  • For off-campus rehearsals, cultural performances (e.g., Inba Thamizh Vizha), or excursions, parent consent is required, and parents remain responsible for their children's welfare during external events unless accompanied by authorized staff.

First Aid & Incident Reporting

  • A fully stocked First Aid Kit is maintained at each campus.
  • In the event of an injury or illness, first aid will be administered, an Accident/Incident Notification Form will be logged, and parents/guardians will be notified immediately.

Contact Information

  • Postal Address: P.O. Box 44, Civic Square, Canberra ACT 2608
  • Phone: +61 2 5119 3334
  • Email: cts@canberratamilschool.org.au
  • Website & Portal: canberratamilschool.org.au
  • Campuses:
    • South Campus: Melrose High School, Mawson ACT
    • North Campus: Harrison Public School, Harrison ACT

மாணவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக் கொள்கை

மேற்பார்வை நேரங்கள்

  • பாடசாலையின் நிர்வாக நேரம் பாடசாலை நடைபெறும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2:45 மணி முதல் 5:15 மணி வரை ஆகும்.
  • பாடசாலை ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பிருந்து (2:55 PM), முடிவடைந்த 5 நிமிடங்கள் வரை (5:05 PM) மட்டுமே மாணவர்களுக்குப் பாடசாலையினால் நேரடி மேற்பார்வை வழங்கப்படும்.
  • இடைவேளைகள் மற்றும் வருகை/செல்லும் நேரங்களில் சுழற்சி முறையில் பெற்றோர் தன்னார்வலர்கள் மேற்பார்வைப் பணியில் ஈடுபடுவர்.

வகுப்பறை மாணவர் எண்ணிக்கை

தகுந்த கவனத்தையும் பாதுகாப்பையும் வழங்க ஒரு வகுப்பறைக்கு அதிகபட்சமாக 10 மாணவர்கள் என்ற விகிதத்தைப் பராமரிக்கப் பாடசாலை முயற்சிக்கிறது.

பாடசாலை எல்லைகள்

  • பாடசாலை வேளையில் வளாக உப அதிபரின் அனுமதியின்றி மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது.
  • வாகன நிறுத்துமிடங்கள், வீதிகள் மற்றும் மேற்பார்வையற்ற இடங்களுக்கு மாணவர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • 'இன்பத் தமிழ் விழா' போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கான பயிற்சிகள் வெளி இடங்களில் நடைபெறும் போது, மாணவர்களின் பாதுகாப்பிற்குப் பெற்றோர்களே பொறுப்பாவார்கள்.

முதலுதவி மற்றும் விபத்து அறிவிப்பு

  • பாடசாலை நிர்வாக அலுவலகத்தில் எப்போதும் முதலுதவிப் பெட்டி (First Aid Kit) தயார் நிலையில் இருக்கும்.
  • ஏதேனும் விபத்துகள் அல்லது காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி அளிக்கப்பட்டு, 'விபத்து அறிவிப்பு படிவம்' பூர்த்தி செய்யப்படும். பெற்றோர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

தொடர்பு விபரங்கள்

  • அஞ்சல் முகவரி: P.O. BOX 44, Civic Square, Canberra, ACT 2608
  • தொலைபேசி: +61 2 5119 3334
  • மின்னஞ்சல்: cts@canberratamilschool.org.au
  • இணையத்தளம்: canberratamilschool.org.au
  • பாடசாலை வளாகங்கள்:
    • தெற்கு வளாகம்: மெல்ரோஸ் உயர்நிலைப் பாடசாலை (Melrose High School, Mawson ACT)
    • வடக்கு வளாகம்: ஹாரிசன் பொதுப் பாடசாலை (Harrison Public School, Harrison ACT)